Wednesday, 10 September 2014

கோங்குரா சிக்கன் Andhra Spl...



தேவையான பொருட்கள்
சிக்கன்
பெரிய வெங்காயம்
கசகசா
கரம் மசாலா
சீரகத்தூள்
தனியாத் தூள்
இஞ்சி பூண்டு விழுது
மிளகாய் தூள்
எண்ணெய்
உப்பு
கோங்குரா இலை
½ கிலோ
2
1 டீஸ்பூன்
1 டீஸ்பூன்
2 டீஸ்பூன்
2 டீஸ்பூன்
2 டீஸ்பூன்
2 டீஸ்பூன்
50 கிராம்
தேவையான அளவு
1 பிடி

செய்முறை

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை ஊற்றவும்.

எண்ணெய் சூடேறியதும் நறுக்கிய பெரிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அத்துடன் இஞ்சி பூண்டு விழுதையும், மிளகாய்த் தூளையும் போட்டு பொன்னிறம் வரும்வரை வதக்கவும்.

அத்துடன்  கழுவி, சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.

சிக்கன் சற்று வதங்கியதும் அரைத்த கசகசா, கரம் மசாலா, சீரகப் பொடி, மல்லிபொடி முதலியவற்றைப் போட்டு உப்பு போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பாத்திரத்தை மூடி சிக்கனை நன்கு வேக வைக்கவும்.

கோங்குரா இலையை சுத்தம் செய்து சிறிது எண்ணெய் விட்டு வதக்கி நைசாக அரைத்துக் கொள்ளவும்.

சிக்கன் நன்கு வெந்ததும் அரைத்த கோங்குராவை கொட்டி மசாலா கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்...